கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 08 சிறப்பு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத துணைப் பொது மேலாளர் ஏ. டி. ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாளை (23) முதல் இவ்வாறு சிறப்பு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை 3 சிறப்பு புகையிரதங்களும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை 3 சிறப்பு புகையிரதங்களும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு கோட்டையில் உள்ள காங்கேசன்துறைக்கு சிறப்பு புகையிரதமும், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு புகையிரதமும் இணைக்கப்பட்டுள்ளது.