மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி – மூத்தநயினார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மதுபோதையில் இருந்த அவர் கிணற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.