மொட்டு கட்சி சார்பு பொதுக் கல்விச் சேவைகள் சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபாங்கொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகை முன்பாகவும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலவரம் தொடர்பிலும் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் வசந்தா ஹந்தபாங்கொடவுடன் மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மொரட்டுவை மேயரின் மகன், மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர்கள் மூவர் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.