கிரிந்த, சித்துல்பவ்வ, யோதகண்டிய வீதியில் கிராவல் வீதியில் காட்டு யானையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கிரிந்த, கொரகஹவுல்பாத பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி, 07 தோட்டாக்கள் மற்றும் காட்டு யானையைக் கொல்லப் பயன்படுத்திய மகசீன் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.