கர்தினால் மல்கம் ரஞ்சித்தை (cardinal malcolm ranjith) சிறையில் அடைப்பதற்காக அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக பொரளையில் உள்ள தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியரின் மகன் ஓஷல ஹேரத் (Oshala Herath) தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கத்தோலிக்கர்களை சிக்க வைத்து கர்தினாலை சிறையில் அடைக்கும் திட்டம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொரளை தேவாலயத்தின் மீதான குண்டுவெடிப்பு வெறும் நாடகம் என்றும், தனது தந்தைக்கு மனநோய் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலே அவர் இதனை கூறியுள்ளார்.