இலங்கையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் வீசிய 2 வலைகளில் ஒரு லட்சம் கிலோ கிராம் மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிக்கடுவ பரேலிய என்ற துறைமுகத்தில் நேற்று முன்தினம் (22-03-2023) வீசிய வலையில் இந்த மீன்கள் சிக்கியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அதனை இழுப்புதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வலையில் பெருந்தொகை பாரா மீன்கள் சிக்கியுள்ளன. முழுமையாக இழுத்து கரைக்கொண்டு வரு பல மணித்தியாலங்கள் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வலைகளிலும் சுமார் 10 ஆயிரம் கிலோ பாரா மீன்கள் கிடைத்தமையினால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.