மாத்தறை வெலிகம பகுதியில் கடலில் நீராடச்சென்ற ஐந்து சிறுமிகளில் மூவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் பின்னர் காணாமல் போயுள்ள சிறுமிகளை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வெலிகம காவல்துறையினர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.