கற்பிட்டி, கண்டக்குளி கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பபெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கற்பிட்டி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரனையை மேர்கொண்டனர்.
எனினும் குறித்த சடலம் அடையாளம் காண முடியாத வகையில் உருக்குலைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் , குறித்த சடலம் வெளிநாட்டவர் ஒருவருடையதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும்,அதன் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாகவும் பொலிஸார் கூறினர்.
சடலமானது, நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைப்படி கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்