கற்பிட்டி பகுதியில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு பொதி செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சுமார் 800 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கற்பிட்டிக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெருமதியென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.