பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இன்று மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் சந்தேகத்திற்கிடமான பார்சலை திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பார்சல் பெல்ஜியத்தில் இருந்து இலங்கையில் உள்ள போலி முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் போதைப்பொருள் இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவிற்கமைய, இந்த சந்தேகத்திற்கிடமான பார்சல் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பார்சல் பொதி இன்று காலை திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.