உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த தாக்குதல்கள் தொடர்பில் “தகவல் தெரிந்தும் தடுக்காமை” என்ற அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்திய புலனாய்வுத்துறையினர் தகவல் வழங்கியும் கூட, படைகளின் பிரதானியாக இருந்த அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அடிப்படையி்ல், தாக்குதல்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் மைத்திரிபாலவின் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
இதனையடுத்து கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட்ட பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரி வரும் நிலையிலேயே மைத்திரிபால தமது மனுவை தாக்கல் செய்துள்ளளார்