எதிரிகளின் ரேடாரில் சிக்காத, ‘மிகவும் அபாயகரமான’ போர் விமானம் என்று கூறப்படும், ‘எப்-47’ விரைவில் அமெரிக்க இராணுவத்தில் இணைய உள்ளது.
அமெரிக்கா தன் இராணுவ பலத்தை மேம்படுத்த, பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களை உருவாக்கி வருகிறது.
இதேபோன்று கடற்படை, விமானப்படைகளிலும் அதிநவீன கப்பல்கள், விமானங்களை தயாரித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, எப் – 47 என்ற ரேடாரில் சிக்காத ஆறாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை, ‘போயிங்’ நிறுவனம் பெற்றது.
இதன் முதல் போர் விமானம், விரைவில் அமெரிக்க விமானப் படைக்கு கிடைக்க உள்ளதாக, அ மெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த விமானத்தின் வடிவமைப்பு, முதன்மை இறக்கைகள் மற்றும் காக்பிட் அருகே, ‘கனார்ட்’ எனப்படும் சிறிய இறக்கைகளுடன் கூடியதாக உள்ளது.
இவை கூர்மையான திருப்பங்கள், தாக்குதலின் போது விமானத்தின் சமநிலை, முன்-பின் சாய்வு கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுகின்றன.
இது, நீண்ட துார பயணத்துக்கு ஏற்ற திறன் பெற்றுள்ளது.

