டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியின் பங்களாவுக்கு அருகில் தேயிலைச் செடிகளுக்குள் மறைந்திருந்து எட்டிப்பார்க்கும் சிறுத்தை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
மலையகத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள விலையில் அங்குள்ள மக்கள் ஸத்தில் வாழ்கின்றனர்.
வீடுகளை நோக்கி வரும் சிறுத்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
இதனால் மக்கள் பேரச்சத்துடன் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்படட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை ம்விடுக்கப்பட்டுள்ளது.