கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் மாதம் குறித்த கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.