ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் ஜே/44 கிராம சேவகர் பிரிவில் இருந்த குண்டு ஒன்று இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், காணியில் உரிமையாளர் குறித்த பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டியவேளை குழியில் இருந்து குண்டு வெளிப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.