ஹட்டன் நகரின் டிக்கோயா வீதியில் அமைந்துள்ள கட்டடங்கள் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளதால் அங்கிருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிக்கோயா வீதி எம்.ஆர். நகர பகுதியில் இடிந்து விழும் கட்டிடங்கள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை நுவரெலியா மாவட்ட கட்டிட ஆய்வு நிறுவன புவியியலாளர்கள் ஆய்வு செய்தனர்.
அதனையடுத்து, சில கட்டடங்களைச் சோதனையிட்டபோது, இதில் சில கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதை அவதானித்ததாக புவியியலாளர் திரு.புத்திக விஜேகோன் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள மிகவும் ஆபத்தான நான்கு மாடி கட்டிடத்தில் வெடிப்புகள் காணப்பட்டதாகவும், எனவே அங்கிருந்தவர்களை வெளியேறுமாறும் அவர் தெரிவித்தார்.