ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3 வது அதிகாரியாக பணியாற்றிய ஈ. குஷானுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று (29) அதிகாலை 3.57 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்த நிலையில், ஈ. குஷான் குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈ. குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.