இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ‘டயமண்ட் லீக்’ (Diamond League) தடகளப் போட்டித் தொடரில், இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க 92.62 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய இலங்கை சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தச் சாதனையுடன், ஆசிய தடகள வரலாற்றில் இரண்டாவது சிறந்த ஈட்டி எறிதல் பரிதியை பதிவு செய்த வீரராகவும், உலகின் சிறந்த வீரர்களில் 8-வது இடத்திற்கும் அவர் முன்னேறியுள்ளார்.
அவரது இந்த சாதனையானது 2026-ஆம் ஆண்டில் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் திறமையாகப் பதிவாகியுள்ளதுடன், 2026-ஆம் ஆண்டில் 90 மீட்டர் எல்லையைக் கடந்த முதல் மற்றும் ஒரே வீரராகவும் ருமேஷ் தரங்க வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
மேலும், இலங்கை தடகள வரலாற்றில் 90 மீட்டர் எல்லையைத் தாண்டி ஈட்டி எறிந்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

