அனுமதியின்றி மின்சாரத்தை துண்டித்த இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
மின்சார சட்டம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் சட்டத் தின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவ ரான ஜனக ரத்நாயக்க கூறினார்.
மின்வெட்டுகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு தடை விதிக்கப்படவில்லை என்றாலும், அதற்கு முன்னதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்