இந்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த பணத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கு தேவையான மொத்த பாடப்புத்தகங்களில் பாதியை அச்சிட முடிந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த ஆண்டு, இலங்கை நிதி நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவித் தொகையாக வழங்கியது.
உணவு, எரிபொருள், மருந்துகள், தொழிற்சாலை மூலப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு இந்தியா கடந்த மார்ச் மாதம் இந்த உதவியை வழங்கியது.
பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதம் மற்றும் மூலப்பொருட்களை பெறுவதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி தொகையில் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் உள்ள 40 இலட்சம் பாடசாலை மாணவர்களில் சுமார் 45 வீதமான மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு இந்த மானியம் உதவியுள்ளது