இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித்தொடர் முடிவதற்குள் இலங்கை வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து ´அத தெரண´விடம் பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போட்டியை புரிந்து கொள்வதில் இலங்கை வீரர்கள் தற்போது உயர் மட்டத்தில் இருப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
முதல் சுற்றின் முதல் போட்டியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை, ஆனால் அதன் பிறகு வீரர்கள் விளையாடிய விதம் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியும். “இரண்டாவது சுற்றில் அவுஸ்திரேலியாவிடம் தோற்றாலும், அந்த ஆடுகளத்தில் உள்ள சூழ்நிலையுடன் நல்ல போட்டியை கொடுத்தோம். எமது பக்கம் தவறு இருந்தது… ஒப்புக்கொள்ள வேண்டும்… இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம். எனினும் பினுரவின் காயம் காரணமாக, எமது திட்டத்திலிருந்து வெளியே வர வேண்டிய நிலை ஏற்பட்டது. “ஆனால், ஒவ்வொரு வீரரும் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். வீரர்கள் முன்னேறி வந்துவிட்டார்கள். அவர்கள் ஒரு விளையாட்டைப் புரிந்துகொள்ளும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. அவர்கள் இன்னும் முன்னேற முடியும்.” “நாங்கள் போட்டியின் நடுவில் இருக்கிறோம். அடுத்த 3 போட்டிகள் மிக முக்கியமானவை. போட்டியின் கடைசி பாதிக்கு வரும்போது அனைவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். அதுதான் முக்கியம்.” “வீரர்கள் ஏன் காயம் அடைந்தார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன.” “சிட்னி ஆடுகளம் எங்கள் வீரர்களுக்கு வழக்கமான ஆடுகளம். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் நல்ல நிலைக்கு வரலாம்.”