இலங்கையில் எரிபொருட்களுக்கான தேவையில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பெற்றோலின் வாராந்த கேள்வி மூவாயிரம் மெற்றிக் தொன்களில் இருந்து நான்காயிரத்து ஐநுாறு மெற்றின் தொன்களாக அதிகரித்துள்ளது
டீசலின் கேள்வி ஐயாயிரத்து ஐநுாறு மெற்றிக் தொன்களில் இருந்து எண்ணாயிரம் தொன்களாக அதிகரித்துள்ளது.
இதற்கான காரணத்தை தெரிவிக்காத சுமித் விஜேசிங்க, இது தீவிரமான நிலையை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இந்த வாரத்தில் இலங்கைக்கு மேலும் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் வரவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கப்பல்கள் வந்த பின்னர், இலங்கை மின்சார சபைக்கான எரிபொருளை கிரமமாக வழங்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.