எரிபொருள் விலைகள் குறைக்கப்படலாம் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி எரிபொருள் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு புதிய விலை இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பீப்பாய் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 103.2 டொலர் ஆகவும், WTI கச்சா எண்ணெய் பரல் விலை 97.50 டொலராகவும் பதிவாகியுள்ளது.
மேலும் ,எதிர்வரும் 5ஆம் திகதி முதல் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பார்ஸ் அறிவித்துள்ளார்.
அதேவேளை லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படுவதாக அறிவிப்பொன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.