இந்தியா – தூத்துக்குடி ஊடாக, இலங்கைக்கு கடத்தவிருந்த 10 கிலோ ஐஸ் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுகிழமை (20-02-2022) இரவு இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்குப் படகு மூலம் போதைப்பொருள் கடத்தவிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழக பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே, படகில் ஏற்ற தயாரான 10 கிலோ ஐஸ் போதைப் பொருளுடன் அதனை கடத்த முயன்ற 7 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி இலங்கை நாணயத்தில் சுமார் 10 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

