இலங்கைக்கு இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த 19 அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
46 ஆவது உயர் விமானக் கட்டளைப் பாடத் திட்டத்தின் கீழ் ஒரு வார கால தொழிநுட்பம் சார்ந்த கற்கை செயற்பாடுகளுக்காக அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.
முப்படைகளிலிருந்து மூத்த கட்டளை மற்றும் பணியாளர் நியமனங்களுக்கான பயிற்சியின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் இதில் அடங்குகின்றனர்.
இந்த விஜயத்தின் போது, அவர்கள் இலங்கை கடற்படை தளபதி உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
மேலும் இந்த விஜயம் இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைவதாக தெரிவிக்கப்படுகிறது.