இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி சங் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்து தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த விஜயத்தினை இராஜாங்கத்தரப்பு தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதேநேரம், அமெரிக்க தூதரகம் புதிய தூதுவரை வரவேற்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி சங்கை நியமிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டு ஜுன் 15ஆம் திகதி பரிந்துரை செய்திருந்தார்.
அதன் பின்னர் அவர் தனது சமர்ப்பணங்களை செனட் சபையில் செய்திருந்தார். இதனையடுத்து கடந்த டிசம்பர் 20 இல் அமெரிக்க செனட் சபையினால் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் எதிர்வரும் பெப்பரவரியில் இலங்கைக்கு வருகை தந்து பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.
ஜூலி ஜியூன் சுங், இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுக்கான தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவின் சியோலில் பிறந்த ஜூலி சுங்ரூபவ் கலிபோர்னியா சான் டியாகோ மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை பயின்றுள்ளார்.
தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக இவர்ரூபவ் அமெரிக்க வெளியுறவு ஆலோசகராகவும், இராஜாங்க திணைக்களத்தின் பதில் செயலாளராக கடமையாற்றியுள்ளர்.
இதற்கு முன்னர் கம்போடியா, தாய்லாந்து, இரான், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.