இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அதன்படி இலங்கைக்கு சுற்றுலா மற்றும் பிற அவசரமற்ற பயணங்கள் ஊக்கமளிக்கவில்லை என சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் அரசியல் சூழ்நிலை குழப்பமடைந்துள்ளதுடன், பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை மேலும் மோசமடை கூடும் என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.