1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ‘சர்பயா’ என்றழைக்கப்படும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹசித சமந்த முஹந்திரம் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த தீர்ப்பை வழங்கினார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு சப்ரகமுவ முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரஞ்சித் நந்தசேன மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரை கலவான பிரதேசத்தில் வாகனத்தில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ´சர்ப்யா´ என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.