மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். எதிலும் துடுக்குத்தனமாக செயல்படாமல் பொறுமை காப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார கண்ணோட்டம் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் கடினமாக இருக்கும் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொலைதூரப் போக்குவரத்தில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மங்களகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்ப பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டி இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சிய படுத்தாமல் இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனசாட்சி படி நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் விட்டு விடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போன இடமெல்லாம் மரியாதை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சியால் வெற்றி பெறக்கூடிய நாளாக இருக்கப் போகிறது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கப் போகிறது. பேச்சுத் திறமை அதிகரித்து அதனால் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சிகளில் உதவுவதற்கு துணை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடன் பிரச்சனையில் இருந்து மீள்வதற்கு பாதை பிறக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடன் பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பகைகள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் பொறுப்பு தேவை. ஆரோக்கியம் படிப்படியாக முன்னேற்றம் காணும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொடர் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதறிய காரியம் சிதறாது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் குறை இருக்காது எனினும் பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமையால் முன்னேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கவனத்தை சிதற விடாதீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு கூட கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். சமூகப் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலை நீங்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. இறைவழிபாட்டின் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் எனவே எதிலும் முனைப்புடன் ஈடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும். உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலாக செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாதத்திறமை அதிகரிப்பதன் மூலம் அனுகூல பலன்கள் கிடைக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். புதிய தொழில் துவங்குவதில் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு சில்லறை பிரச்சனைகள் மறையும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. நண்பர்கள் மூலம் நம்பிக்கையூட்டும் நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதில் புது உற்சாகம் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத செலவு ஏற்படக்கூடும் என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கடுமையான உழைப்பு உயர்வை தரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி வாகை சூடக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். சுப காரிய தடைகள் விலகும். புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் தொழிலில் லாபம் காணலாம். உத்தியோகஸ்தர்கள் பணம் இழுப்படியாக இடையில் வந்து சேரும்.