மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு இருந்து வரும் எதிர்ப்புகள் அடங்க தொடங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் வாக்கு வாதங்கள் மூலம் மன நிம்மதி சீர்கெடும் எனவே கூடுமானவரை அமைதியுடன் இருப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் உரிமைகள் மறுக்கப்படும் பொழுது மன உளைச்சல் ஏற்படும் எனவே விழிப்புணர்வுடன் சாதகமாக செயல்படுவது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் பேச்சில் அனுபவ ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக செயல்பட இருக்கிறீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சில வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது முன்னேற்ற பாதைக்கு வழி வகுக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நட்பு வட்டத்தை விரிவடையச் செய்து கொள்ளும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியமாக செயல்படுவதன் மூலம் லாபம் இரட்டிப்பாக உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அரசு வழி காரியங்களில் காலதாமதத்தை சந்திப்பீர்கள். வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தீட்டிய திட்டங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகளை பெற இருக்கிறீர்கள். நீண்டநாள் கடன்களை வசூல் செய்யும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கையை ஓங்கி இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி காணப்படும். சக பணியாளர்கள் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் திறமை உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத நல்லதொரு நாளாக அமைகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத சில நல்ல விஷயங்கள் நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். இதில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் வெளியிடங்களில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சில சூட்சும விஷயங்கள் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை அவசியம் தேவையாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை மற்றவர்கள் வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பார்கள். எதற்கும் அசைந்து கொடுக்காமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொறுமையுடன் இருப்பதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முனைவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக அமைய இருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகளின் தொல்லைகள் நீங்க கூடிய அற்புத வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களையும் நண்பர்களாகக் கொள்ளும் அற்புதம் நிகழும். நீண்ட நாள் சந்திக்க வேண்டிய ஒருவரை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராததை எதிர் பாருங்கள். திடீரென சில விஷயங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு தேவை. வீண் பழிகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை உடன் இருங்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில உணர்ச்சிவசமான முடிவுகள் உங்களுக்கு எதிராக திரும்பக் கூடும் என்பதால் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும் என்பதால் கூடுமானவரை அமைதியைக் கடைப்பிடித்து தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். நிதானம் தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கடமை உணர்வு அதிகரித்து காணப்படும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பெருக்கிக் கொள்ள கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய சுய அறிவை பயன்படுத்தி எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொண்டு விடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி சுறுசுறுப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை மறைத்து வைக்காமல் வெளிப்படுத்தி விடுவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.