மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் மன மகிழ்வை ஏற்படுத்தும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மன கசப்புகள் தீரும். தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போராடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததற்கு எதிர் மாறாக நடக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பணியில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன அமைதியை கொடுக்கக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கின்றது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் பண வரவு இருக்க போகிறது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். தேவையற்ற மன உளைச்சல் நீங்கும். ஆரோக்கியத்தில் இருக்கும் சிறு சிறு பாதிப்புகளை எதிர்கொள்வார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் ஏதோ ஒரு குழப்பநிலை நீடிக்கும். பழைய நினைவுகள் வந்து செல்லும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். சாதகமற்ற சூழ்நிலை என்பதால் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் வேலையில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலாக எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலையில் இருந்து வந்த சூழ்நிலை மாறி சூடு பிடிக்கத் தொடங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியம் கவனம் செலுத்துங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி கொடுக்கக் கூடிய அமைப்பாக இருப்பதால் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணலாம். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் தனவரவு இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு ஊடல்கள் வந்து மறையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் தன்னம்பிக்கை தேவை. மற்றவர்கள் உங்களை குழப்பி விட நினைத்தாலும் தெளிவுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அமையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சமயோஜித புத்தியால் நன்மைகள் நடைபெறும். பிரிந்துசென்ற உறவுகள் வந்து சேரும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் தெரியும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியே செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். எதிர்காலம் பற்றிய சிந்தனை கொஞ்சம் மேலோங்கி காணப்படும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் கொடுக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது. இதுவரை இருந்து வந்த கவலைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் ஒப்பந்தங்கள் கிடைக்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை வாங்கும் யோகம் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் செய்ய முடிவு எடுப்பது நல்லது. நீண்ட நாள் நண்பர்களைக் காணோம் யோகம் உண்டு