மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியாக அமைகிறது. சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே வீண் சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்வீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதம் நிகழக் கூடியதாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பழைய கடன் பாக்கிகளை வசூல் செய்வீர்கள். கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் அக்கறையுடன் பணியில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல செய்திகளைக் கேட்க கூடிய இனிய நாளாக அமைய இருக்கின்றது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் பொறுப்பு தேவை. சாதகமற்ற அமைப்பு என்பதால் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருப்பது உத்தமம். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணியில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் வீட்டிலிருக்கும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். உற்றார், உறவினர்களுடன் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் நட்பு வட்டம் விரியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதுமையை படைக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளுக்கு எதிர்மறையாக சில விஷயங்கள் நடக்கும் என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களில் ஈடுபடும் முன்பு கவனம் தேவை. முடிவுகள் எடுக்கும் முன்பு துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்தவும். கணவன், மனைவி உறவில் விரிசல் விழாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே நடக்கும் சண்டை சச்சரவுகளை பற்றிய புரிதலை உணர்வது நல்லது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களை எதிர்த்து வெற்றி பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை தகர்த்தெறிந்து துணிச்சலாக செயல்படக்கூடிய நாளாக இருக்கும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு உண்டாகும். சமூகத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் நினைத்த காரியங்கள் நடைபெறும். சாதகம் உள்ள அமைப்பு என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்கள் பொறுமையால் சாதனை புரிவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை விலகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து வேலையில் கூடுதல் அக்கறையுடன் செயலாற்றுவது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேலான சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். எதிர்காலம் பற்றிய திட்டமிடல் வெற்றி அடையும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. திடீர் வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி இருக்கும்.