மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்ப்பதை விட இரட்டிப்பு லாபம் காணலாம். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்ப போகிறது. சுபகாரிய முயற்சிகளில் தொய்வு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சில் இனிமை உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் முன்னெச்சரிக்கையுடன் கையாளுவது நல்லது. தேவையற்ற பேச்சு வார்த்தைகளைத் தவிர்த்து வேறு எதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஆடம்பரத்தை குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சுபகாரியத் தடைகள் விலகும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு கவனம் தேவை. துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூட்டுத் தொழில் முயற்சிகள் நல்ல லாபம் கொடுக்கும். பயணங்கள் மூலம் அனுகூல பலன் பெறுவீர்கள். தொழில் தடை நீங்கி வியாபாரம் விருத்தி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் காலதாமதமான பலன்களே கிடைக்கும் என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் வேலையில் கவனம் செலுத்துவது உத்தமம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு சிறப்பாக இருக்கும். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்து சேர வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமூகத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வளரும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு மற்றவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நீண்ட நாள் போராட்டம் முடிவுக்கு வரும். மனதில் இருக்கும் கவலைகளை அகற்றி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் வலுவாக வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. பழகிய பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் முடிவுகளில் உறுதியாக இருப்பது நல்லது. தேவையற்ற குழப்பங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் தெளிவு தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியத் தடைகள் விலகும். பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அரோக்கியம் படிப்படியாக முன்னேற்றம் காணும்.