மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாட்டின் மீது அதிக ஆர்வம் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரிகள் புதுமையை படைக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இழுபறியில் இருந்து வந்த காரியங்களும் நடக்கும் யோகம் உண்டு. விட்டு சென்ற உறவுகள் உங்களை நாடி வர வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை மூலம் ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. புதிய சிந்தனைகள் வளர்ச்சிப் பாதையை அமைத்துக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் அனுகூல பலன் கொடுக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கவனம் சிதறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும் நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களும் நண்பர்களாவார்கள். செய்த புண்ணியம் உங்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுடைய துணிச்சல் வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்க வைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிர்வரும் எந்த ஒரு விஷயத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிலுவையில் இருக்கும் வேலைகளும் சேர்த்து முடியும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத சில விஷயங்களை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அதிக நேரத்தை செலவிடுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பண ரீதியான விஷயத் தில் கவனத்துடன் இருப்பது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் கஷ்டப்பட்டால் தான் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பால் உயரக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறும் யோகம் உண்டு. தொழில் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி ஆகும் என்பதால் நீங்கள் தடைபட்ட காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விட்டுக் கொடுத்துச் செல்வதால் அனுகூல பலன் உண்டாகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து செல்லும். தேவையற்ற விஷயங்களை பேசி பெரிதாக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய கூடிய அமைப்பு உண்டு. வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மனதுக்கு நிறைவான வேலை அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறும் வாய்ப்புகள் அமையும்.