மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பும் யோசித்து செய்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளை தவிர்த்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்கள் முன்கோபம் குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்யத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. கணவன் மனைவி இடையில் நடக்கும் பிரச்சனைகளை ஆற போடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மேலோங்கிய புதிய சிந்தனைகள் காணப்படும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வழியில் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவி இடையே நெருக்கம் மிகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பொருளாதார ரீதியான முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவது நல்லது.
கடகம்:
கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கூடுமானவரை வெளியிட பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக வீண் விரயங்களை சந்திக்க நேரலாம் என்பதால் எச்சரிக்கையும் தேவை. குடும்பத்தில் பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகலாம். தன்னம்பிக்கை தேவை.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேவையற்ற அநாவசிய பொழுது போக்குகளை குறைத்துக் கொள்வது நல்லது. பொருளாதார ரீதியான ஏற்றம் காண இருக்கிறீர்கள் எனினும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்த மறைமுக புதிய முயற்சிகள் கைகொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பல்வேறு எதிர்ப்புகள் ஏற்படலாம். தளராத மனமும், அயராத உழைப்பும் வெற்றியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பலன் உண்டாகும். உங்கள் என்றோ செய்த நன்மைகள் இன்று உங்களுக்கு பலன் கொடுக்கும் வகையான அமைப்பு உள்ளது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்மறை எண்ணங்கள் மேலோங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வாக செயல்படுவது அவசியம். மனதில் இருக்கும் கவலைகளை அகற்றுவது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். கூட்டு தொழில் புரிபவர்களுக்கு லாபம் காணும் யோகம் உண்டு. பகை விலகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத தோல்விகளை சந்திக்க வாய்ப்புக்கள் இருப்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களை கையாளும் பொழுது கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி இருக்கும்.
தனுசு:
தனுசு ராசி பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதை செய்தாலும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. அவசர முடிவுகள் எதிர்பாராத மாற்றங்களை கொடுத்துவிடும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மன உளைச்சலில் இருந்து விடுபட இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிடங்களில் வீண் அலைச்சல் ஏற்படலாம்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் காண கூடிய அமைப்பு என்பதால் உற்சாகத்துடன் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. மற்றவர்களுக்கு பாதிப்புகள் இல்லாமல் எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிக பொறுப்புணர்வு தேவை. பிள்ளைகள் மூலம் சுபச் செய்தி உண்டு.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சுமூகமாக எதிர் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் சிக்கல் நீடிக்கும் என்பதால் நிதானம் தேவை. பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து உங்கள் வழியில் நடப்பது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக அமைய இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் பண வரவு கிடைக்கும். தகுந்த சமயத்தில் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வழக்கில் சாதகமான முடிவு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்