மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். உயர்ந்த எண்ணம் கொண்ட உங்களுக்கு சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணியாளர்கள் மூலம் அனுகூல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் விரயம் ஆகலாம் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகமாக செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனோதிடம் அதிகரிக்கும். அரசு வழி காரியங்களில் எச்சரிக்கை தேவை. அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பணம் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகும். அரசு துறை மூலமாக வரக்கூடிய விஷயங்களில் சாதக பலன் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களுடன் ஆரோக்கியமான போட்டி போடுவீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எல்லா பிரச்சனைகளும் தீரக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. வெற்றி வாகை சூட கூடிய அற்புதமான அமைப்பு என்பதால் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்கலாம். கணவன் மனைவிக்குள் தீராத பிரச்சனைகளும் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு லாபம் தேடும் முயற்சி அதிகரிக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த விஷயங்களில் சாதக பலன் கிட்டும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோறுடன் காணப்பட வாய்ப்புகள் உண்டு. சாதகமற்ற அமைப்பு என்பதால் முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் கடந்த கால பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சில சமயங்களில் விரக்தி மனப்பான்மை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் பணிச்சுமையோடு இருப்பீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நாளாக இருக்கிறது. வெளியிட பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. புதிய தொழில் உங்களுக்கு சாதக பலன் கொடுக்கும். வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உபயோகத்தில் உள்ளவர்கள் எதையும் பொறுமையாக கையாளுவது நல்லது. தாம் தூம் என்று செலவு செய்யாமல் சிக்கனம் மேற்கொள்ளுங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வாகனங்களின் செல்லும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் நீடிக்கும். முக்கிய முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது. ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த பாதிப்புகள் மெல்ல மெல்ல மறையும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தயக்கத்துடன் எந்த ஒரு பணிகளையும் செய்யக்கூடாது. வருவது வரட்டும் என்ற மனப்பான்மையுடன் இருந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய போட்டியாளர்கள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில காரியங்களில் நீங்கள் கவனமுடன் இருப்பது நல்லது. குறிப்பாக பண ரீதியான விஷயத்தில் உங்களை சுற்றி உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் ஏற்படாமல் இருக்க அத்தியாவசிய பேச்சு வார்த்தையை மட்டும் உபயோகிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தயக்கங்கள் நீங்கி நல்ல ஒரு சூழ்நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம். கணவன் மனைவி இடையே இருந்து வந்த தவறான கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வம்பு, வழக்குகள் வரலாம் என்பதால் வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முயற்சிகளில் இலுப்பறி ஏற்படலாம். பொருளாதார ரீதியான ஏற்றம் வீட்டு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யும். சகோதர சகோதரிகளுக்கு இடையே மனக்கசப்புகள் ஏற்படலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமையை மேலும் வளர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம் எனவே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. ஆரோக்கியத்தில் அனுகூல பலன் உண்டு.