மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வெளியிட பயணங்களின் மூலம் அனுகூல பலன் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய நட்பு வட்டம் விரியும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய வல்லமை பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்வது ஏற்றத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் பாராட்டுகள் குவியும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேற்றுமதத்தவர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுக்கும்படி பேசுவீர்கள். குடும்பத்தில் உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் அதிகரிக்க வாய்ப்புகள் அமையும். பெண்கள் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முகத்தில் பொலிவு அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் வந்து கிடைக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் மறையும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முதல் உடைய உரிமைக்காக போராட கூடிய நாளாக அமைய இருக்கிறது. எதை செய்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பவர்களுக்கு சரியான பாடம் புகட்ட முனைவீர்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெரும் பாக்கியம் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வெளியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே நடந்து வந்த பனிப்போர் நீங்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நீங்கள் எதிர்பார்ப்பதை அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்துப் போகும் திறமை வேண்டும். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் எண்ணங்கள் நேர்மறையாக சிந்திக்கும் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய புகழ் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடிய வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கிடைக்கின்ற சிறிய சிறிய சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் பார்ப்பீர்கள். உங்களுடைய முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது உசிதமானது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமைகளை மேலும் அதிகரிக்கும் வண்ணம் வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு வர வேண்டிய பண தொகைகளை சேருவதில் காலதாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற வார்த்தைகளை பேசுவதில் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பாதை புலப்படும் நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் மூத்த நண்பர் களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் திறமைகளை மேலும் மெருகேற்றிக் கொள்ள முனைவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறு சிறு மன குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பக்கபலமாக உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற விமர்சனங்கள் ஏற்படும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயலாற்றுங்கள். பெண்களுக்கு புதுமையை படைக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருப்பதால் ஜெயம் நிச்சயம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.