மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழ இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செய்யாத குற்றத்திற்கு பழி ஏற்கும் நிலை ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் உண்டாகும் இருக்கிறது. தடைப்பட்ட சுபயோக வைபவங்கள் கைகூடிவரும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை மேலும் வலுவாக்கும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் இணக்கம் ஏற்பட்டு ஆதரவு பெருகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் கருத்து வேறுபாடுகள் தவிர்த்து ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். உத்யோகஸ்தர்கள் தங்கள் தேவையை அறிந்து செலவு செய்வது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்களை காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் உத்வேகம் பிறக்கும். தட்டிச்சென்ற ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு சாதகமான பலன்கள் அமைய இருக்கிறது. புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து வெற்றியின் பாதையை நோக்கி பயணிப்பது நல்லது. கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்றம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் அக்கறை தேவை. உங்கள் அலட்சியம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மன கசப்புகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவ பொறுமை தேவை. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். உத்யோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகளை எடுக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களுக்கு எது தேவை? எது தேவையில்லை? என்கிற முடிவை நீங்கள் சிந்தித்து எடுப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்கவும். சுய தொழிலில் ஏற்றம் காணலாம். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சங்கடங்கள் தீரக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. இதுவரை உங்களை சுற்றி நடக்கும் பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியான முன்னேற்றம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புத வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேருவதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் முன்னேற்றம் குறித்த கவலை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அடைய விரும்பியதை சாமர்த்தியமாக அடைவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போர் நீங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடும் என்பதால் கவனம் தேவை. சுற்றி இருக்கும் நபர்களை உன்னித்து கவனிப்பது நல்லது. உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக சிலர் செயல்படக் கூடும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் நன்றாக நடைபெறும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பழைய நண்பர்களை காணும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். புதிய பாதை தென்படக்கூடிய நாளாக இருப்பதால் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. ஆரோக்யம் சீராகும்.