மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் தடையில்லாமல் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய மனநிலை அமைதி பெற தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். கணவன் மனைவி உறவு சிக்கல் முடிவுக்கு வரும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சில விஷயங்களை கஷ்டப்பட்டு தான் முடிக்க வேண்டியிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமாக இருந்து வந்த நெருக்கடிகள் மாறும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற கோபத்தை தவிர்த்து நிதானம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யும் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்க இறை வழிபாடு செய்வது உத்தமம்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை கிடைக்க வேண்டிய நேரத்தில் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் வருமானம் இருப்பதால் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முடிவு எடுக்கும் பொழுது ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விலகி விட்டு சென்றவர்கள் கூட மீண்டும் இணையும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வம்பு வழக்குகள் வரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். கணவன் மனைவி உறவுக்கு இடையே விரிசல் ஏற்படாமல் இருக்க கூடுமானவரை விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் மிகப் பெரிய பாரம் ஒன்று இறங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய விஷயங்களை கலைந்து புதிதாக வாழ கூடிய எண்ணங்கள் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது கைகூடி வரும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். மனம் அமைதி பெற இறைவனைப் பிரார்த்தித்து கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர்மறையாக நடக்கும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தை சற்று கவனியுங்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தீட்டிய திட்டங்கள் நிறைவேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உடைய ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். குடும்பத்தில் புதிய வரவு ஒன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிற்கு திருப்தி தரும் சில விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் புதிய முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்ப பிரச்சினைகளை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கேட்ட இடங்களிலிருந்து கேட்ட விஷயங்கள் கிடைக்கும் என்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய சரக்குகள் கூட விற்பனையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடன்களை தவிர்க்கவும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உணவு கட்டுபாடு மேற்கொள்வது நல்லது.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.