மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் காலதாமதமான பலன் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதையும் பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடக்கும். ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். விடாமுயற்சிக்கு உரிய வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் வெளியிட பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். புதிய நட்பு வட்டம் விரியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பும் சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. திடீர் பயணங்கள் மூலம் எதிர்பாராமல் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பொருளாதார முன்னேற்றத்தை காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்கள் கடமையில் இருந்து தவறாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக் கசப்புகளை தீர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் துணிச்சலாக சில விஷயங்களை எதிர் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே நடக்கும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மை உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் புதிய பொலிவுடன் தென்படுவீர்கள். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கடமையில் கூடுதல் பொறுப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நேர்மறையாக சிந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. எதையும் உறுதியாக நின்று வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதையோ சாதித்தது போல ஒரு உணர்வு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் வளரும் என்பதால் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காணும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பொருட் சேர்க்கை உண்டாகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் இணக்கம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். சுபகாரியத் தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நபர்கள் மூலம் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை உண்டாகும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் காண வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி காணும் வாய்ப்பு உண்டு. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. புதிய தொழில் துவங்குபவர்கள் துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.