மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். இடைப்பட்ட நிலுவையில் இருந்த வேலைகளும் முடிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. புதிய தொழில் துவங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது. புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகளை தாண்டி உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் புதிய மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. ராஜதந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய பொறுப்புகளையும் சேர்த்து ஏற்க வேண்டி இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த ஆசை நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விலகிச் சென்ற உறவுகளும் மீண்டும் வந்து சேர வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்க பெறுவீர்கள். குடும்ப ஆதரவும் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இடம் மாற்றம், மன மாற்றம் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். சுய தொழிலில் உள்ளவர்கள் பயணங்கள் மூலம் லாபகரமான பலன்களை காண இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான நல்ல நாளாக இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான ஒரு பலன்கள் கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய எதிர்பார்ப்புகளை தாண்டிய மகிழ்ச்சி காத்திருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு வந்து போக வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகன ரீதியான பயணங்களின் பொழுது கவனமுடன் இருப்பது உத்தமம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விவாதங்களை தவிர்ப்பது நல்ல பலன்களை கொடுக்கும். வீண் பேச்சு வார்த்தையில் மூக்கை நுழைக்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிகம் உழைக்க வேண்டிய சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பது நல்லது. முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்த தவறை எண்ணி வருத்தப்படக் கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் எதையும் நீங்கள் முன் நின்று நடத்திக் கொடுப்பீர்கள். சுப காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பிடிவாதம் தளர்த்தப்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பழைய பிரச்சினைகளை சுலபமாக தீர்த்து காட்டுவீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருள் சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய பாதையை நோக்கி பயணிக்க கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். பொருளாதாரம் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அரசியல் ஆதாயம் காண வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகன பயணங்களின் பொழுது அலட்சியம் இல்லாமல் இருப்பது நல்லது. தீட்டிய திட்டங்கள் நிறைவேறும்