மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக இருக்கிறது. தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைக்கக் கூடியதை செய்துவிட்டு காட்டுவீர்கள். சுயதொழிலில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கிடைக்கக்கூடிய பலன்கள் சிறப்பாக இருக்க போகிறது. தடைப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விஷயம் முடிவுக்கு வரும். மனதில் இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடன் பகை ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிலும் நிதானம் கையாளுவது நல்லது. ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுங்கள். சுபகாரியத் தடைகள் விலகி வெற்றி காணும் யோகம் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வந்து சேரும். வீண் விரயங்களை கட்டுக்குள் கொண்டு வருவது நல்லது. சேமிப்பின் முக்கியத்துவம் தெரிந்து கொள்வீர்கள். சுயதொழிலில் இருப்பவர்கள் நவீன உபகரணங்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும். சுய தொழிலில் உள்ளவர்கள் பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடியில் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கேட்டது கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பெரிய மனிதர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேலோங்கும். சுப காரிய தடைகள் நீடிக்கும் என்பதால் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் சாதகமாக அமையும் என்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். சுபகாரியத் தடைகள் ஏற்படாமலிருக்க நிதானம் கடைபிடிப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நீண்ட நெடிய பயணங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரிகள் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெரியாத விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பதும் நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்