மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். வெளியிடங்களில் கொடுத்து வைத்த பணம் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சிகரமான நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்களுடைய பணியில் கூடுதல் அக்கறை தேவை. தேவையற்ற நபர்களைப் பற்றிய பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் விழிப்புணர்வு தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? என்கிற கவலை மேலோங்கி காணப்படும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது உத்தமம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலப் பலன்களைக் கொடுக்கக் கூடிய அமைப்பாக இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடின உழைப்பு உயர்வை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிரிந்துசென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைய வாய்ப்புகள் உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாளாக நிலுவையில் இருந்து வந்த தொகை கைக்கு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. கடன் சுமைகள் ஓரளவுக்கு குறையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நேர்மையுடன் செயல்படக் கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற குறுக்கு வழியை தேர்ந்து இருப்பதை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை எளிதாக நிறைவேற்றி விடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துடிப்புடன் செயல்பட கூடிய அமைப்பாக இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களில் தேவையற்ற வார்த்தைகள் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவே பேச்சில் இனிமை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்த காரியம் நடக்க இருக்கிறது. ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் கூடிய அமைப்பாக இருப்பதால் உற்சாகம் தரக்கூடிய நாளாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் லாபம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகள் நீங்கி வெற்றி காண கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. எடுக்கும் முடிவுகளில் சுய முடிவு செய்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இந்த நிலை நீடிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும். பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரம் ஏற்றம் காணும் என்பதால் வீட்டு தேவைகள் எளிதாக பூர்த்தி செய்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களுடன் இணக்கம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் தீரும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் பயணம் செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களின் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களுடன் போட்டிகள் வலுவாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி காண கூடிய யோகம் உண்டு. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நல்லது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் மீண்டும் தொடங்கும் வாய்ப்புகள் அமையும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. ஆரோக்கியத்தை கவனியுங்கள்