மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுத்த கடன் வசூல் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் கவனம் தேவை. மனதை பக்குவப்படுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள் வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பாதைகள் திறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு உரிய ஊதியம் கிடைக்கும். கற்பனை செய்வதை நிறுத்துங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் பரிவுடன் நடந்து கொள்வீர்கள். தேவை அறிந்து பூர்த்தி செய்யுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய அனுபவங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்புகளையும் தவறவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்பு தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் உறவினர்கள் உங்கள் பலவீனம் அறிந்து செயல்படுவார்கள் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமைகளை மேலும் மெருகேற்றிக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தித்து முடிவெடுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் விட்டு சென்ற சில உறவுகள் தேடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி நெருக்கம் குறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதை நிறுத்துங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடன் பிரச்சனை வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பகைவர்களையும் நண்பர்களாக ஆக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நிம்மதியை இழக்க வேண்டாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வம்புகள் தேடி வரலாம் கவனம் வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வலுவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமயோஜித புத்தி இருக்கும். பொறுமை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். நல்லது கெட்டது அறிவது நல்லது. குடும்பத்தில் கனிவு தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களை கவரும் புதிய யுக்திகள் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வளைந்து கொடுத்து செல்லுங்கள். இடம் அறிந்து செயல்படுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நற்செய்திகளை பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விலகி சென்றவர்களும் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இனம்புரியா மகிழ்வுடன் காணப்படுவீர்கள். கவலைகளை துரத்தி அடியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிவுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எடுத்துக் கொண்ட சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சுய தொழிலில் வீண் அலைச்சலை தவிர்க்க திட்டமிடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கருத்து பரிமாற்றத்தில் கவனம் வேண்டும். முன்பின் யோசிக்காமல் வார்த்தைகளை விடாதீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வெற்றியை பயணத்தை நோக்கி பயணப்படுவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சி தரும் வகையில் அமையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் பிரச்சனை வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பகை மாறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகம் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நினைத்ததை நிறைவேற்றி காட்டுவீர்கள். விமர்சனங்களை கண்டு கொள்ளாதீர்கள்