மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் விஷயங்களில் கால தாமதம் ஏற்படலாம். எதையும் நிதானத்துடன் கையாளுவது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் முறை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு கிடைப்பதில் சாதகப்பலன் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன் மனைவி இடையில் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணிவு உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாந்தமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பேசுவதில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற வார்த்தைகள் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நினைத்த விஷயத்தில் வெற்றி பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சி திருவினையாக்கும் என்பதால் விடாமுயற்சியுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக சோர்வு உண்டாகும். பெண்களுக்கு ஓய்வு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் தீர விசாரித்து முடிவெடுப்பது நல்லது. அவசர முடிவுகள் எதிர்பாராத திருப்பங்களை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஈகோ தவிர்ப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த குழப்ப நிலை மாறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் லாபம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். உங்களுடைய தொழில் விருத்தி ஆகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க விடாமுயற்சியுடன் போராடுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி காண கூடிய யோகம் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தாய் தந்தையருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். மனைவிவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பரிசு காத்திருக்கிறது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தெளிவு தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையான இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மிக சிந்தனை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்த பின் முடிவெடுப்பது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். சாதகம் உள்ள சூழ்நிலையில் என்பதால் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் ஆன்மீக ரீதியான எண்ணங்கள் மேலோங்கி காணப்படும். இதுவரை நடக்குமா? நடக்காதா? என்று நினைத்து ஒரு காரியம் நடக்க இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு களிப்பு உண்டாகும். சில ஆரோக்கிய குறைபாடுகளையும் உடனே கவனிப்பது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிக சினம் ஆபத்தை கொடுக்கும் என்பதால் பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் காலதாமதமாக செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சாதனை படைக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கும். தேவையான சமயத்தில் நண்பர்களின் உதவிகரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அலைச்சல் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு இது வரை இருந்து வந்த கவலை நீங்கும். தேவையற்ற சலனத்தை தவிர்ப்பது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை சுற்றி இருக்கும் போட்டிகள் குறைந்து முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை, தாமதங்கள் விலகும். நினைத்ததை அடைந்து காட்டக் கூடிய யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவு ஏற்படும். செலவுக்கு மீறிய வரவு இருக்கும் என்பதால் கவனம் தேவை.