மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமான லாபம் உண்டாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நபர்களிடமிருந்து அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய கனவு நிறைவேற இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய தைரியம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய தன்னம்பிக்கை மேலும் அதிகரித்து காணப்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் உங்களுடைய நண்பர்கள் ஆதரவு கொடுப்பார்கள். நீண்டநாள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று நடக்க இருக்கிறது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய எதிர்பார்ப்புக்கு உரிய வருமானம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக போட்டியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர்மறையாக நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாகும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய சிந்தனை, சமூகத்தின் மீதான அக்கறை மேம்பட்டு காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டு மறையும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எவரையும் எதிர்க்கும் தைரியம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களை சுற்றியிருப்பவர்கள் உடைய சுய உருவத்தை கண்டு கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தேவை. சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகமுண்டு.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எத்தகைய முயற்சியிலும் வெற்றியைக் காணும் வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாள் போராட்டத்திற்கு முடிவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய மனநிலையில் உற்சாகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும். கணவன் மனைவி உறவு சிக்கல் தீர்ந்து ஒற்றுமை பலப்படும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீர்ந்து அமைதி பிறக்கும் அற்புதமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் பெருகும். புதிய வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகளை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கிறது. சாதகம் உள்ள அமைப்பு என்பதால் அதெல்லாம் குளங்கள் கூடிய நல்ல நாள் ஆகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் வருமானம் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் காண கூடுதல் ஒத்துழைப்பு தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சவாலான வேலை கூட சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். மற்றவர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்துடன் செலவிடக் கூடிய நேரத்தை எதிர் பார்த்து இருப்பீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நிதானத்துடன் கையாள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பனிப்போர் படிப்படியாக குறையும். தொழில் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்களை சுற்றி இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய திறமை வெளியுலகிற்கு தெரியவரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல பலன் உண்டு.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்ததைவிட அனுகூலமான பலன்களை பெறக்கூடிய அற்புத வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய தொகை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிறைவு இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலன் உண்டு. வழக்கு வம்பு போன்றவற்றில் கவனத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். தொலைதூரப் பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் ரீதியான நீங்கள் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம்,