மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு இடையே மூன்றாம் மனிதர்களை நுழைய விடாமல் பாதுகாப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகத்தில் ஒரு பொலிவான தேஜஸ் தெரியும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சகிப்புத்தன்மை மேலும் அதிகரிக்க வேண்டிய நாளாக இருக்கும். பேச்சுவார்த்தைகளில் இனிமை இருந்தால் பல பிரச்சனைகளை சமாளிக்கலாம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யும் முன் கவனம் தேவை. துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுயமதிப்பீடு சிறப்பாக இருக்கும். உங்களைப் பற்றி நீங்களே புரிந்து கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை எதிர்மறையாக சிந்திக்க வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் குழப்பமான நிலையில் முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சாதக பலன் உண்டு.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும் நாளாக இருக்கிறது. நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆடம்பர செலவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவ கூடிய நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே புதிய புரிதல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடா முயற்சிக்கு இடையூறுகள் ஏற்பட்டாலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பல தடைகளை தாண்டி வெற்றி அடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளில் இருந்து வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குறுக்கு வழியை சிந்திக்காமல் இருப்பது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகப் பலன் உண்டு. கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கிக் காணப்படும். சகோதரர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாதுரியம் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும் யோகம் உண்டு.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிலும் ஆர்வத்துடன் ஈடுபட கூடிய வாய்ப்பு உண்டு. புதிய விஷயங்களைத் தேடி தேடி கற்றுக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக தொகையை ஈடுபடுத்தி பெரிய லாபம் காணும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவு சீராக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள்.