மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சொல்ல நினைத்த விஷயத்தை சொல்லி விடுவது நல்லது. முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம். சுப காரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய நபர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யோகம் தரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எதிலும் பாசிட்டிவான எண்ணம் காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் சங்கடங்கள் வரலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஆசைப்பட்ட விஷயம் கிடைக்கும் அற்புதமான நாளாக இருக்கிறது. தேவையில்லாமல் டென்ஷன் ஆவதை தவிர்க்கவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுதந்திரமான மனநிலை நீடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உரிமைகள் பறிக்கப்படலாம் கவனம் வேண்டும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் உயர்ந்தவையாக காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியை இருக்கும். புதிய அனுபவங்கள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் தென்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணிய திட்டங்கள் நிறைவேறும். திடீர் அலைச்சல் உண்டாக வாய்ப்பு உண்டு. குடும்ப அமைதிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முற்போக்கு சிந்தனை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இறைவழிபாட்டில் அதிக நாட்டம் செலுத்துவீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சொன்ன சொல்லை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாசுவாதங்களை தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உற்சாகத்துடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கிறது. உத்தியோகஸ்தர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு முடிவுகளையும் நீங்கள் குழப்பம் இல்லாமல் எடுப்பீர்கள். குடும்பத்தில் புதிய நிகழ்வுகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் நன்மதிப்பு பெறும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் பழிகள் மறையும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யோகம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலன் காணலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முனைப்புடன் இருப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பாதைகள் தென்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத சலுகைகளை பெறுவீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் அலட்சியம் காண்பிக்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் பணி புரியும் பணியாளர்களுக்கு தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இழந்த உரிமைகளும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விட்டு சென்ற உறவுகள் தேடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இதுவரை இல்லாத புத்துணர்வு காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வரவுக்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள்.