இன்று முதல் வழமை போன்று ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக ரயில்வே ஊழியர்கள் மற்றும் என்ஜின் சாரதிகள் பணிக்கு வருகைதருவதற்கு எரிபொருள் வழங்குமாறு கோரி தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று முதல் ரயில் சேவைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது