கோதுமை மாவின் விலையை பிறிமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளதென விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, இன்று நள்ளிரவு முதல் கோதுமை மா கிலோவொன்றின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக செரண்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.